வாட்சப் மூலம் வீடியோக்களை ஹேக் செய்த சிறுவன் - பலரை மிரட்டி பணம் பறித்த 15 வயது சிறுவன்

வாட்சப் மூலம் எடுக்கப்பட்ட வீடியோக்களை வைத்து மிரட்டி பலரிடம் பணம் பறித்த 15வயது ஹேக்கரை மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர்.
வாட்சப் மூலம் வீடியோக்களை ஹேக் செய்த சிறுவன் - பலரை மிரட்டி பணம் பறித்த 15 வயது சிறுவன்
x
வாட்சப் மூலம் எடுக்கப்பட்ட வீடியோக்களை வைத்து மிரட்டி பலரிடம் பணம் பறித்த 15வயது ஹேக்கரை மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர். 

மத்திய பிரதேசம் Singrauli மாவட்டத்தில் உள்ள மோர்வா காவல்நிலையத்தில் இளைஞர்  ஒருவர் தன்னை பிரியங்கா என்ற பெண்  நிர்வாணமாக  வாட்சப் மூலம் வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் அளித்தார். அதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. மோர்வா பகுதியை சேர்ந்த கணினி அறிவுபெற்ற15 வயது சிறுவன் இந்தியாவில் தடை விதிக்கப்பட்ட செயலியை பிளேஸ்டோரில் டவுன்லோடு செய்து அதன் மூலம் போலி வாட்சப் ஐடி உருவாக்கி,  பிறரின் தகவல்களையும், வீடியோக்களையும் ஹேக் செய்தது தெரிய வந்தது. இந்த நிலையில் சிறுவனை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில்,  பிரியங்கா என்ற பெயரில் ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்களில் போலி வாட்சப் ஐடிக்களை உருவாக்கி பல பெண்கள் மற்றும் நண்பர்களின் வீடியோக்களை பதிவு செய்ததாகவும், அதனை காட்டி மிரட்டி பணம் பறித்ததாகவும் கைதான சிறுவன் தெரிவித்துள்ளான்.   

Next Story

மேலும் செய்திகள்