42.15 கோடி தடுப்பூசி விநியோகம் - மத்திய அரசு

மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 42 கோடியே15 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகளை மத்திய அரசு விநியோகம் செய்துள்ளது.
42.15 கோடி தடுப்பூசி விநியோகம் - மத்திய அரசு
x
42.15 கோடி தடுப்பூசி விநியோகம் - மத்திய அரசு 

மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 42 கோடியே15 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகளை மத்திய அரசு விநியோகம் செய்துள்ளது.நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசு இதுவரை, 42 புள்ளி 15 கோடிக்கும் அதிகமான  தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது.ஜூலை 19ஆம் தேதி காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 39 கோடியே 55 லட்சத்து 31 ஆயிரத்து 378 டோஸ் தடுப்பூசி பயன்படுத்தப்பட்டுள்ளது.2 கோடியே 60 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்