"சட்டப் பேரவை நிகழ்வு - நேரடி ஒளிபரப்பு தேவை" - கமல்ஹாசன்

தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோரியுள்ளார்.
x
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிப்படையான அரசு நிர்வாகம், பங்கேற்பு ஜனநாயகம் என்பதை தொடக்கம் முதல் வலியுறுத்தி வருவதாகவும், சட்டமன்ற நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்வது பொதுப் பிரச்னைகள் மீது நிகழ்த்தும் விவாதங்களைச் சாமானியன் அறிந்துகொள்ள உதவும் என கோரியுள்ளார். இதேகோரிக்கையை வலியுறுத்தி 2012-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை, சாக்குபோக்கு சொல்லி அதிமுக அரசு நிலுவையில் போட்டுவிட்டதாக சாடிய அவர், தேர்தல் அறிக்கையில் கூறியது போல், சட்டமன்ற நிகழ்வுகளை திமுக வெளியிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

நாடாளுமன்றம் மற்றும் கேரள சட்டமன்ற நேரடி ஒளிபரப்பை குறிப்பிட்ட அவர், பட்ஜெட் கூட்டத்தொடரில் துறை வாரியான  மானியக் கோரிக்கை விவாதங்களை நேரடி ஒளிபரப்பு செய்ய தமிழக அரசு ஆவன செய்ய கோரியுள்ளார். மக்கள் தங்களைப் பாதிக்கும் விவகாரங்களில், தங்கள் பிரதிநிதிகளின் நிலை என்னவாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வார்கள் என்றும், இணைய வழி நேரடி ஒளிபரப்பு, தமிழகத்துக்கு ஒரு சவாலான விஷயமல்ல என்றும் சுட்டிக்காட்டி உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்