நடிகர் விஜய் வழக்கு - நீதிபதி அமர்வு மாற்ற உத்தரவு

சொகுசு கார் வழக்கில் விதிக்கப்பட்ட அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
x
சொகுசு கார் வழக்கில் விதிக்கப்பட்ட அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. நடிகர் விஜய் இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு அளிக்க மறுத்த தனி நீதிபதி ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். இதை எதிர்த்தும், தீர்ப்பில் உள்ள நீதிபதியின் கருத்தை நீக்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் விஜய்யின் வழக்கு வரி தொடர்பான மேல் முறையீடுகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்ற பதிவுத்துறை நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
நடிகர் விஜய்யின் மேல்முறையீடு மனு நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்