நீட் - அரசு பள்ளிகளில் விண்ணப்பிக்குமாறு அறிவுரை

நீட் தேர்வு எழுத உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள், அந்தந்த பள்ளியிலேயே விண்ணப்பிக்க வேண்டும் என்று கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
x
நீட் தேர்வு எழுத உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள், அந்தந்த பள்ளியிலேயே விண்ணப்பிக்க வேண்டும் என்று கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 

மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் போட்டித் தேர்வு நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 12ம் தேதி நடைபெற உள்ளது. 

நீட் தேர்வை எழுதுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை கடந்த 16ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் நீட் தேர்வை எழுத உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள், அந்தந்த பள்ளிகள் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும் என்று கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கைகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, நாளை காலை 11 மணிக்கு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. அதன்பிறகு நாளை முதல் நீட் தேர்வுக்கு அரசுப்பள்ளி மாணவர்கள் விண்ணப்பம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த ஆண்டுகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, அரசு பள்ளி மாணவர்களுக்காக நீட் தேர்வு விண்ணப்பம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்