"இணையத்தில் வழக்கு விவரம்" - காவல் ஆணையர் தகவல்

சைபர் குற்றப் பிரிவு உள்ளிட்ட மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்படும் வழக்குகளின் விவரங்கள் காவல் துறை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதாக, சென்னை மாநகர காவல் துறை ஆணையர் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செயதுள்ளார்.
x
சைபர் குற்றப் பிரிவு உள்ளிட்ட மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்படும் வழக்குகளின் விவரங்கள் காவல் துறை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதாக, சென்னை மாநகர காவல் துறை ஆணையர் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செயதுள்ளார். வழக்குகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளும் வகையில் இணையதளத்தில் வழக்குகளை இணைக்க கோரி, பாலாஜி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி முன்பு விசாரனைக்கு வந்த போது சென்னை மாநகர காவல் ஆணையர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தமிழக காவல்துறை இணையதளத்தில் சைபர் குற்றப் பிரிவு, மத்திய குற்றப் பிரிவுகள் இணைக்கப்பட்டு, வழக்குகள் குறித்த அறிக்கைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்