ஸ்டேன் சாமி சிறையில் இறந்த விவகாரம் - ஐ.நா., அறிக்கை
மனித உரிமை ஆர்வலர் ஸ்டேன் சாமி இந்திய சிறையில் இறந்தது, மனித உரிமை வரலாற்றில் ஏற்பட்ட கறை என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
உபா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட ஸ்டேன் சாமி, கடந்த 5-ம் தேதி உயிரிழந்தார். இதுகுறித்து ஐ.நா., செய்தித் தொடர்பாளர் மேரி லாலர் வெளியிட்ட அறிக்கையில், ஆதாரங்கள் இல்லாமல் கைது செய்யப்படும் மனித உரிமைகள் ஆர்வலர்களை, உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை, ஸ்டேன் சாமி இறப்பு உணர்த்துவதாக கூறியுள்ளார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக மனித உரிமைகளுக்காகவும் சமூக நீதிக்காகவும் போராடிய ஸ்டேன் சாமியின் இறப்பு, இந்திய மனித உரிமைகள் வரலாற்றில், ஏற்பட்ட கறை என விமர்சித்துள்ளார்.
Next Story

