இந்தியாவின் சிறந்த முதல்வராக மு.க. ஸ்டாலின் தேர்வு - ’ஓர்மாக்ஸ்’ ஆய்வு முடிவில் அறிவிப்பு

இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருப்பதாக தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
x
 இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருப்பதாக தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

'ஓர்மாக்ஸ்' என்ற நிறுவனம் மாதந்தோறும் இந்தியாவில் உள்ள முதல்-அமைச்சர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து அவர்களில் யார் சிறந்த முதல்-அமைச்சர் என்று பட்டியலிட்டு வருகிறது. 

 
அந்த அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் நடத்திய ஆய்வு முடிவில் இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

 
பதவியேற்றது முதல் தீவிர மக்கள் பணியாற்றி வரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 68 சதவீதம் மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார். 

 
2-வது இடத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும், 

 
3-வது இடத்தில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கும் உள்ளனர்.

 
4-வது இடத்தில் அசாம் முதலமைச்சர் ​ஹிமந்தா பிஸ்வா சர்மாவும், 

 
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 5-வது இடத்தையும் பிடித்துள்ளனர். 

 
6-வது இடத்தில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்தயா நாத்தும், 
 
7-வது இடத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் பிடித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்