சாலையோர மரங்களை வெட்டுவது தொடர்பாக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

திருச்செந்தூரிலிருந்து - அம்பாசமுத்திரம் வரை சாலையோர மரங்களை வெட்டுவது தொடர்பாக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது
சாலையோர மரங்களை வெட்டுவது தொடர்பாக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
x
திருச்செந்தூரிலிருந்து - அம்பாசமுத்திரம் வரை  சாலையோர மரங்களை வெட்டுவது தொடர்பாக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற 
மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னை - கன்னியாகுமரி தொழில் தட திட்ட பிரிவின் கீழ் திருச்செந்தூரிலிருந்து அம்பாசமுத்திரம் வரை  சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக சாலையோரம் உள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்படுவதை நிறுத்த உத்தரவிடக்கோரி  
உடன்குடியை சேர்ந்த கருப்பையா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். பழமையான மரங்களை வெட்டுவது ஏற்புடையது அல்ல என்று மனுவில் குறிப்பிட்டுள்ள அவர், வெட்டப்படும் ஒரு மரத்திற்கு 10 மரங்கள் வீதம்நட்டு வளர்த்து,  அதன்பின்பு சாலை விரிவாக்க பணியை  மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.  இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், மனுதாரர் கூறுவது போல், 3 ஆயிரம்  மரங்கள் வெட்டப்படவில்லை என்றும், ஆயிரத்து 93 மரங்கள் மட்டுமே வெட்டப்பட உள்ளதாகவும் கூறினார். இதை விசாரித்த நீதிபதிகள் சாலையோர மரங்களை மொத்தமாக வெட்டினால்,  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்வோர் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று தெரிவித்தனர். இது குறித்து   சென்னை - கன்னியாகுமரி தொழில் தட திட்ட பிரிவு இயக்குநர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்