நீட் தேர்வு தொற்றுப்பரவலுக்கு வழிவகுக்கும்; முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை நடத்துவது தொற்றுப்பரவலுக்கு வழிவகுக்கும் என்பதால், முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று, முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீட் தேர்வு தொற்றுப்பரவலுக்கு வழிவகுக்கும்; முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
x
நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை நடத்துவது தொற்றுப்பரவலுக்கு வழிவகுக்கும் என்பதால், முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று, முதலமைச்சர்  ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, மாநில முதலமைச்சர்களுடன் காணொலிக் காட்சி மூலம் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டிற்கு தடுப்பூசி ஒதுக்கீடு மிக குறைவாக உள்ளதாக கூறினார்.

தடுப்பூசிக்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளதால், கூடுதல் தடுப்பூசிகளை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

முன்னுரிமை அட்டைதாரர்களுக்கு கூடுதல் அரிசி வழங்கும் திட்டத்தை,  தகுதியுடைய அனைத்து அட்டைதாரர்களுக்கும் ஒன்றிய அரசு விரிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

பள்ளி - கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் தற்போதைய சூழலில், நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை நடத்துவது தொற்றுப்பரவலுக்கு வழி வகுத்துவிடலாம் என்று கூறியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின்,

நீட் தேர்வு நடத்தும் முடிவை பிரதமர் மறுபரிசீலனை செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்