காவிரி தொழில்நுட்ப குழுவினரை அனைத்துக்கட்சி குழுவினர் சந்திப்பு

டெல்லியில் காவிரி தொழில்நுட்ப குழுவினரை அனைத்துக்கட்சி குழுவினர் சந்தித்து பேசினர்
x
மேகதாது அணை விவகாரம் தொடர்பாகமத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை தமிழக அனைத்து கட்சி குழு இன்னும் சற்று நேரத்தில் சந்திக்க உள்ளது. 

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான தமிழக அனைத்து கட்சி குழு டெல்லியில் முகாமிட்டுள்ளது.

திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, அதிமுக சார்பில் ஜெயக்குமார், .வைகோ, ஜி.கே.மணி, பாலகிருஷ்ணன், திருமாவளவன், பால் கனகராஜ் உள்ளிட்ட 13 பேர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். 

மத்திய அமைச்சரை சந்திக்கும் போது, கடந்த 12ஆம் தேதி தமிழகத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை எதிர்த்து ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட மூன்று தீர்மானங்களின் நகல் வழங்கப்பட உள்ளன. 

மேகதாது அணை கட்ட கர்நாடகா அரசுக்கு அனுமதிக்கக் கூடாது எனவும் அவர்கள் வலியுறுத்த உள்ளனர். 

ஒரு வேளை மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், அதனால் தமிழகத்திற்கு ஏற்படும் பாதிப்புகளையும் அந்த குழு, மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்திடம் எடுத்துரைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


முன்னதாக, டெல்லியில் காவிரி தொழில்நுட்ப குழுவினரை அனைத்துக்கட்சி குழுவினர் சந்தித்து பேசினர். அமைச்சர் துரை முருகன் தலைமையில் சென்றுள்ள குழுவினர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். அதன் பிறகு, மத்திய ஜலசக்தி துறை அமைச்சரை சந்திப்பதற்காக அனைவரும் புறப்பட்டுச் சென்றனர். இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் மத்திய அமைச்சரை அவர்கள் சந்திக்க உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்