மாணவிகளிடம் அத்துமீறிய சிவசங்கர் பாபா - பள்ளி ஆசிரியைகளிடம் விசாரிக்க முடிவு

கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி ஆசிரியைகள் மற்றும் ஊழியர்களுக்கு சம்மன் கொடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
x

சம்மன் கொடுத்து விசாரிக்க உள்ள சிபிசிஐடி
ஆதாரங்களை திரட்டும் நோக்கில் விசாரணை  

கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி ஆசிரியைகள் மற்றும் ஊழியர்களுக்கு சம்மன் கொடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

பள்ளி மாணவிகளிடம் அத்துமீறியதாக கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவி சுஷ்மிதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியைகள் மற்றும் ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். வரும் திங்கட்கிழமை முதல் பள்ளி ஆசிரியைகளை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தவும் அவர்கள் முடிவெடுத்துள்ளனர். முதற்கட்டமாக பள்ளியில் பணிபுரிந்து வரும் 5 ஆசிரியைகளுக்கு சம்மன் அனுப்ப உள்ளனர். தொடர்ந்து அனைத்து ஊழியர்களிடமும் அவர்கள் தனித்தனியாக விசாரணை நடத்த உள்ளனர். சிவசங்கர் பாபா மீதான புகார்களுக்கு ஆதாரங்களை திரட்டும் பணியாக இந்த விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்