மெரினா கடற்கரை பராமரிப்பு - சரமாரி கேள்வி

மெரினா கடற்கரையை தூய்மையாக பராமரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையிலான குழுவை ஏன் அமைக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
மெரினா கடற்கரை பராமரிப்பு - சரமாரி கேள்வி
x
மெரினா கடற்கரையை தூய்மையாக பராமரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையிலான குழுவை ஏன் அமைக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் ஐஸ்கிரீம் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கக்கோரிய வழக்குகள் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்செல்வி அமர்வில் விசாரிக்கப்பட்டது.

அப்போது, மெரினாவை முறையாக பராமரிப்பதில்லை என்றும், அதுகுறித்து யாரும் கவலை கொள்வதில்லை என்றும் குற்றம்சாட்டிய நீதிபதிகள், மாநகராட்சி மண்டல அதிகாரி, மாநகர காவல் ஆணையர் ஆகியோரை எதிர் மனு தாரர்களாக சேர்த்தனர்.

மெரினா கடற்கரையில் குப்பை போடுவோரிடம் அபராதம் வசூலிக்கபடுகிறதா, தினமும் எவ்வளவு குப்பைகள், எவ்வாறு  சேகரிக்கப்படுகிறது, கழிவறை அமைப்பு ஆகியவை குறித்தும் வினவினர். 

இரவு 10 மணிக்கு பிறகு காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதா, மெரினா உள்சாலை அருகே, ஏன் மீன் அங்காடி அமைக்கக்கூடாது என்றும் கோரினர். 

மெரினாவை பராமரிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி, மாநகராட்சி, பொதுப்பணித் துறை, காவல்துறை, சமூக ஆர்வலர், வியாபார பிரதிநிதி உள்ளிட்டோர் குழுவை தமிழக அரசு ஏன் அமைக்கக் கூடாது என விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள்,  விசாரணையை ஜூலை 22ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்