தடுப்பூசியும்... தனது சினிமாவும்... வடிவேலு சொன்ன குட்டி கதை
நல்லா இருக்க தமிழ்நாட்ட பிரிக்க வேண்டாம் என நடிகர் வடிவேலு கருத்து தெரிவித்துள்ளார்
நல்லா இருக்க தமிழ்நாட்ட பிரிக்க வேண்டாம் என நடிகர் வடிவேலு கருத்து தெரிவித்துள்ளார். முதலமைச்சரிடம் கொரோனா நிவாரண நிதி வழங்கிய பின்னர் நிருபர்களுக்கு அளித்த அவரின் கலகலப்பான பேட்டியை தற்போது பார்க்கலாம்...
மெர்சலுக்கு பிறகு படம் ரிலீசாகாவிட்டாலும், தினந்தோறும், நகைச்சுவையாலோ, மீம்ஸ்களாலோ தமிழ்குடிகளை பார்த்து செல்பவர் வைகைப்புயல் வடிவேலு
கொரோனா தடுப்பு பணிக்கு நிவாரண உதவி வழங்குவதற்காக சென்னை தலைமை செயலகத்திற்கு சென்ற வடிவேலு, முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்..
சந்திப்பை முடித்து வெளியே வந்த வடிவேலு, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தனது பட காட்சியை, தடுப்பூசி போடுவதுடன் ஒப்பிட்டு கலகலப்பாக பேசினார்
Next Story
