"மத்திய அரசின் செயல் தேச அமைதிக்கு குந்தகம்" - கமல்

காவிரி விவகாரத்தில் நீதியின் குரலே தேசியக் குரலாக ஒலிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்
மத்திய அரசின் செயல் தேச அமைதிக்கு குந்தகம் - கமல்
x
"நடந்தாய் வாழி காவேரி" என்று பாடும் நம்மை "நின்றாய் நீ காவேரி" என்று வாடும் நிலைக்குத் தள்ளுகிறது கர்நாடக அரசு. தடையின்றி ஓட வேண்டிய நதியில், கர்நாடகா மேலும் ஒரு அணையைக் கட்டி தமிழக விவசாயிகளின் வாழ்வை கேள்விக் குறியாக்க நினைப்பது வன்மையாக கண்டிக்கத் தக்கது என குறிப்பிட்டுள்ளார். பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டிய தார்மீக மற்றும் அரசியல் சாசனப் பொறுப்பை மத்திய அரசு உணரவில்லை என்பதே வரலாறு என சாடியுள்ள கமல்ஹாசன், இது தேச அமைதிக்கும், ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கும் செயல் என்றும்,  இது அரசியல் சாசன மாண்பைக் குலைப்பதாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இந்த அநீதிப் போக்கு இனியும் தொடர்வது நியாயமல்ல என குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், மத்திய அரசின் குரல் தேசியக் குரலாகவும், நீதியின் குரலாகவும் ஒலிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்