வறுமை ஒழிப்பு - உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை
பதிவு : ஜூலை 14, 2021, 04:36 PM
சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் வறுமை ஒழிக்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சாலை, நடைபாதை, அரசு அலுவலகங்கள் கட்டுமான பணிகளின் தரத்தை பரிசோதிக்கக்கோரி, சென்னையைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா பகவத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு அமைக்கும் சாலைகள் ஆறு மாதங்கள் கூட நீடிப்பதில்லை எனவும், இதை அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை எனவும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் குற்றச்சாட்டினார். மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், சாலைகள், கட்டிடங்கள் கட்டுவது தொடர்பாக உள்ள விதிகளை அமல்படுத்தவும் அறிவுறுத்தினர். சாலைகள் அமைப்பது தொடர்பாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவோ, ஆய்வு செய்யவோ முடியாது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், குடிமக்கள் விழிப்புணர்வுடன் அதிகாரிகளையும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும் பொறுப்பாக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் அடிப்படை கல்வி முழுமையாக வழங்கப்படவில்லை என்று வேதனை தெரிவித்த நீதிபதிகள், இன்னும் நாட்டின் பொருளாதாரம் 'டேக் ஆப்' நிலையிலேயே இருப்பதாகவும், எப்போது 'டேக் ஆப்' ஆகும் என்று தெரியவில்லை எனவும் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

300 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

241 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

148 views

பிற செய்திகள்

இமாச்சலபிரதேசத்தில் நிலச்சரிவு.. நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி

இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட பெரிய அளவிலான நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

20 views

பொறியியல் சேர்க்கை - அட்டவணை வெளீயீடு "நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்"

பொறியியல் சேர்க்கை - அட்டவணை வெளீயீடு "நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்"

24 views

நாளை பிரதமரை சந்திக்க டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

நாளை பிரதமரை சந்திக்க டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

23 views

ரூ.21 செலவில் 120 கி.மீ பயணிக்கும் கார்..! - தமிழரின் அசத்தல் கண்டுபிடிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் குறைந்த செலவில் பேட்டரியில் இயங்கும் காரை வடிவமைத்து பொறியாளர் ஒருவர் கவனத்தை ஈர்த்துள்ளார்.

27 views

டார்லிங் பர்னிச்சர் 100வது கிளை - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் டார்லிங் பர்னிச்சர் கடையின் 100ஆவது கிளை திருவாரூரில் திறக்கப்பட்டுள்ளது.

19 views

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.