இந்தியா - பாகிஸ்தான் போர் : 50ம் ஆண்டு வெற்றி தினம்; தீபக் கோப்பை ஏந்தி கடற்படை வீரர்கள் மரியாதை

இந்தியா பாகிஸ்தான் போரின் 50ம் ஆண்டு வெற்றி தினத்தை முன்னிட்டு, உச்சிப்புளி ஐ.என்.எஸ் பருந்து கடற்படை தளத்திற்கு தீபக்கோப்பை கொண்டு வரப்பட்டது.
இந்தியா - பாகிஸ்தான் போர் : 50ம் ஆண்டு வெற்றி தினம்; தீபக் கோப்பை ஏந்தி கடற்படை வீரர்கள் மரியாதை
x
1971ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி பெற்றதை அடுத்து, அதைக் கொண்டாடும் விதமாக இந்தியா முழுவதும் உள்ள ராணுவ தளங்களுக்கு,  ஸ்வர்ணம் விஜய் வர்ஷா தீப கோப்பை கொண்டு செல்லப் படுகிறது. இந்நிலையில், இன்று ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ஐ.என்.எஸ் பருந்து கடற்கரை தளத்திற்கு தீப கோப்பை கொண்டு வரப்பட்டு, இந்தியா-பாகிஸ்தான் போரின் 50ம் ஆண்டு வெற்றி தினம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கடற்படை வீரர்கள் கோப்பையை ஏந்தி வலம் வந்தனர். இந்நிகழ்வில், போரில் கலந்து கொண்ட முன்னாள் வீரர்கள் கலந்து கொண்டு, போரின் போது உயிரிழந்த வீரர்களை நினைவு கூர்ந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்