"நீட் தேர்வு ஆய்வுக்குழு முரணானது அல்ல"

தமிழக அரசு அமைத்த நீட் ஆய்வு குழு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
நீட் தேர்வு ஆய்வுக்குழு முரணானது அல்ல
x
ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் தமிழக அரசு அமைத்த நீட் ஆய்வுக்குழுவுக்கு எதிராக பாஜக மாநில பொது செயலாளர் கரு நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரிந்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்த‌து, தமிழக அரசின் கொள்கை முடிவு என தெரிவித்தனர். மேலும், நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்ய மட்டுமே குழு அமைக்கப்பட்டுள்ளதால், ஏ.கே.ராஜன் குழு மத்திய அரசின் சட்டத்திற்கும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது அல்ல என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறையை தடுக்கும் வகையில், மாநில அரசு தனது அதிகார வரம்பை மீறவில்லை எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். இந்த குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறையை மாற்றியமைக்க மத்திய அரசிடம், மாநில அரசு கோரிக்கை வைக்கலாம் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், நீட் தேர்வில் பங்கேற்கும் வகையில் மாநில அரசின் பாடத்திட்டங்களை தரம் உயர்த்த இந்த குழுவின் பரிந்துரைகள் பன்படலாம் என தெரிவித்தனர். மேலும், மாநில அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி, கரு நாகராஜன் தொடர்ந்த வழக்கை  தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே நீட் குறித்து ஆய்வு செய்து வரும் ராஜன் குழு தனது அறிக்கையை நாளை தமிழக அரசிடம் வழங்க உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்