மேகதாது அணை விவகாரம் : ஓரணியில் ஒன்றிணைந்த கட்சிகள் - அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும்?

மேகதாது அணை விவகாரத்தில் ஓரணியில் இணைந்த தமிழக கட்சிகள், கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
x
மேகதாது அணை விவகாரத்தில் ஓரணியில் இணைந்த தமிழக கட்சிகள், கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழக அரசின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும்? என்பதை விவரிக்கிறது, இந்த தொகுப்பு...

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக
அரசின் முடிவை, தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

இதுதொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இதில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகளும், பிரதான எதிர்கட்சிகளான அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது,

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்கும் மற்றும்....

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் டெல்லி சென்று மத்திய அரசிடம் நேரில் வழங்குதல் ஆகிய 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதன்பிறகு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், காவிரி பிரச்சினை தமிழ்நாட்டின் வாழ்வுரிமை பிரச்சினை என்றும், மேகதாது அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒரே சிந்தனையுடன் உள்ளன எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்