குறைகளை கேட்டு மனு பெற்ற கார்த்தி சிதம்பரம் மனைவி
பதிவு : ஜூலை 12, 2021, 07:50 PM
சிவகங்கை எம்.பி. கார்த்திக் சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி, புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்து, மனுக்கள் வாங்கியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
சிவகங்கை எம்.பி. கார்த்திக் சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி, புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்து, மனுக்கள் வாங்கியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. அரிமளம், கல்லக்குடி, இருப்பு, புதுநிலைப்பட்டி, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்த அவர்,  பெண்களிடம் தடுப்பூசி போட்டுக்கொண்டீர்களா என கேட்டறிந்தார். மகளிர் சுய உதவிக் குழுவினரை சந்தித்த ஸ்ரீநிதி, பெண்கள் விழிப்புணர்வுடன் பாதுகாப்போடு இருக்க வேண்டும் என்றார். கால்நடை மருந்தகம் அமைக்க கோரிய பெண்களிடம், கணவரும், எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.   

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.