பழம்பெருமை மிக்க ஊட்டி மலை ரயில் - திருச்சியில் தயாராகும் 2 புதிய என்ஜின்கள்

பழம்பெருமை மிக்க ஊட்டி ரயிலுக்கு, திருச்சியிலுள்ள பொன்மலை ரயில்வே பணிமனையில் புதிதாக 2 எஞ்சின்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன...இது பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...
பழம்பெருமை மிக்க ஊட்டி மலை ரயில் - திருச்சியில் தயாராகும் 2 புதிய என்ஜின்கள்
x
மலை ரயில் பயணம்...நினைக்கையிலே இனம் புரியா பரவசம்...நெடுந்தூரப் பயணமும் களைப்பற்றுப் போகும்... மலைகளின் மேலே ஊர்ந்து...குகைகளின் ஊடே பாய்ந்து...தண்டவாளப் படுக்கையில் ரயில்கள் ஊர்ந்து செல்வதுதான் எத்தனை அழகு. கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரைக்கும் இயக்கப்படும் மலை ரயில் கிட்டத்தட்ட 112 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் துவக்கி வைக்கப்பட்டது. சுவிட்சர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை எரித்து, அதில் இருந்து வரும் நீராவி மூலம் இயங்கி வந்தது இந்த மலை ரயில். மலை ரயிலில் பயணித்துக் கொண்டு...பிடித்த பாடலை ஒளிக்க விட்டு...மலைக் காற்று சில்லிடச் செய்ய...நீலகிரியின் இயற்கை எழிலை...மலை முகடுகளை...வனங்களில் ஓடித் திரியும் விலங்குகளை கண்குளிர ரசிப்பதெல்லாம் அலாதி சுகம்.

ஆனால் பழம்பெருமை வாய்ந்த இந்த ரயில் எஞ்சின் அடிக்கடி பழுதாகி வந்த நிலையில், புதிய எஞ்சின்கள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக, எட்டரை கோடி ரூபாய் மதிப்பில், நிலக்கரி எரியூட்டப்பட்டு கிடைக்கும் நீராவியால் இயக்கப்படும் எஞ்சினும், 9 கோடியே 80 லட்ச ரூபாய் மதிப்பில், பர்னஸ் எண்ணெய் மூலம் எரியூட்டப்பட்டு, நீராவியால் இயக்கப்படும் எஞ்சினும் பொன்மலை ரயில்வே பணிமனைகளில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சுமார் 70 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், அடுத்த மாதம் 2வது வாரத்தில், சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாகவும், 100 சதவீத திருப்தி இருந்தால் மட்டுமே புதிய எஞ்சின்கள் ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் பணிமனை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

3,600 பாகங்கள் கொண்ட இந்த மலை ரயிலில், 1,400 பாகங்கள் பொன்மலை ரயில்வே பணிமலையிலும், மீதமுள்ள பாகங்கள் கோவை மற்றும் வெவ்வேறு இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களிலும் தயாராகின்றன. ஒரே நேரத்தில் 4,200 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் டேங்க், மற்றும் மூன்றரை டன் எடை கொண்ட நிலக்கரியையும் இதில் எரிபொருளாக எடுத்துச் செல்ல முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

Next Story

மேலும் செய்திகள்