தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வத்துடன் வந்த பொதுமக்கள் - ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் நிலை
பதிவு : ஜூலை 12, 2021, 04:11 PM
மயிலாடுதுறையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் காலை 7 மணி முதலே நீண்ட நேரம் காத்திருந்தும், குறைவான எண்ணிக்கையிலேயே தடுப்பூசி செலுத்தப்பட்டதால், ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
மயிலாடுதுறையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் காலை 7 மணி முதலே நீண்ட நேரம் காத்திருந்தும், குறைவான எண்ணிக்கையிலேயே தடுப்பூசி செலுத்தப்பட்டதால், ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். சேந்தக்குடி நகராட்சி தொடக்கப்பள்ளியில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை 250 பேருக்குத் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் காலை 7 மணி முதலே 500க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்நிலையில் தடுப்பூசி கிடைக்காத மக்கள் சோகத்துடன் வீடு திரும்பினர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.