செல்போன் டவர் இல்லாததால் சிரமம் - மலைக்கு சென்று ஆன்-லைன் கல்வி

கொரோனா ஊரடங்கில் ஆன்-லைன் வகுப்பில் கல்விக்கற்க தினசரி 2 கிலோ மீட்டர் நடந்துச் சென்று மலையில் பாடம் படிக்கும் மஞ்சளார் கிராம மாணவர்கள் குறித்து பார்க்கலாம்
செல்போன் டவர் இல்லாததால் சிரமம் - மலைக்கு சென்று ஆன்-லைன் கல்வி
x
கொரோனா ஊரடங்கில் ஆன்-லைன் வகுப்பில் கல்விக்கற்க தினசரி 2 கிலோ மீட்டர் நடந்துச் சென்று மலையில் பாடம் படிக்கும் மஞ்சளார் கிராம மாணவர்கள் குறித்து பார்க்கலாம்.

கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு  ஆன்-லைன் வாயிலாக கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், பல கிராமங்களில் செல்போன் டவர் இல்லாததால் இன்டர்நெட் சேவை கிடைக்காததால் மாணவர்கள் ஆன்-லைன் கல்வியை தொடர்வதில் சிக்கல்கள் நிலவுகிறது.

இதுபோன்ற இன்னலை தேனி மாவட்டம் பெரியகுளம் மஞ்சளார் கிராமத்தில் இருக்கும் மாணவர்கள் எதிர்க்கொண்டு உள்ளனர்.

மஞ்சளார் அணையின் கீழ்பகுதியில் இருக்கும் அக்கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் தினசரி, 2 கிலோ மீட்டர் மலைப்பகுதிக்குள் நடந்துச் சென்று பாறை நிழலில் அமர்ந்து படிக்கிறார்கள்.

டவர் இல்லாததால் ஆன்லைன் கல்வியை தொடர்வது கடினமாக உள்ளது என வேதனை தெரிவிக்கும் மாணவர்கள், தொலை தொடர்பு நிறுவனங்கள் உதவ வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

டவர் இல்லாததால் பேச முடியவில்லை
ஆசிரியர்கள் கொடுக்கும் பணியை செய்ய முடியவில்லை

செல்போன் சிக்னல் கிடைக்காததால் வெளியூரில் இருப்பவரிடம் பேச 6 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தேவதானப்பட்டிக்கு செல்ல வேண்டிய சூழல் இருப்பதாக கூறும் கிராம மக்கள், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்