கடந்த 24 மணிநேரத்தில் அதிக மழைப்பொழிவு

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மிக அதிக அளவில் மழை பொழிவை எதிர்கொண்ட ஊர்களைப் பற்றி விவரங்களை தற்போது பார்க்கலாம்...
x
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று மழை வெளுத்து வாங்கியது.வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, கள்ளக்குறிச்சி மாவட்டம் கலயநல்லூரில் 14 சென்டி மீட்டர் மழை பதிவாகி முதல் இடத்தில் உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சுலாங்குறிச்சியில் 13 சென்டி மீட்டர் மழை பதிவாகி இரண்டாம் இடத்தில் உள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் 11 சென்டி மீட்டர் மழை பதிவுடன் முன்றாம் இடத்தில் உள்ளன. 
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவத்தில் 10 சென்டி மீட்டர் மழை பதிவாகி நான்காவது இடத்தில் உள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, கடலூர் மாவட்டம் பண்ருட்டி, திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் ஆகிய ஊர்  9 சென்டி மீட்டர் மழை பதிவாகி ஐந்தாவது இடத்தில் உள்ளன .ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகி ஆறாவது இடத்தில் உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், திருவள்ளூர் மாவட்டம் கொரட்டூர், சிவகங்கை மாவட்டம் திருபுவனம், திருப்பத்தூர் மாவட்டம் அலங்காயம், மதுரை மாவட்டம் புலிப்பட்டி, வேலூர் மாவட்டம் அம்முண்டு, விழுப்புரம் மாவட்டம் மைலம் ஆகிய ஊர்களில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகி ஏழாவது இடத்தில் உளளன .மதுரை மாவட்டம் சோழவந்தான், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், சென்னை டிஜிபி அலுவலகம், காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஊர்களில் 6 சென்டி மீட்டர் மழை பதிவாகி எட்டாவது இடத்தில் உள்ளன


Next Story

மேலும் செய்திகள்