செந்தில் பாலாஜி வெற்றி பெற்றதற்கு காணிக்கை - தீக்குளித்து உயிரை விட்ட திமுக விசுவாசி
பதிவு : ஜூலை 09, 2021, 04:57 PM
திமுக மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றதற்காக கரூரை சேர்ந்த திமுக விசுவாசி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம், லாலாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் உலகநாதன். போக்குவரத்து துறை பரிசோதகராக இருந்து ஓய்வு பெற்றவர். திமுக விசுவாசியான இவர், மண்மங்கலம் புது காளியம்மன் கோயிலில் திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் அப்போது அவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று கிடைத்தது. அதில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்றும், செந்தில் பாலாஜி வெற்றி பெற்று அமைச்சராக வேண்டும் என வேண்டுதல் வைத்ததாக குறிப்பிட்டுள்ளார். தன் வேண்டுதல் இரண்டுமே நிறைவேறிய நிலையில் முழு மனதோடு தன் ​உயிரை காணிக்கையாக்குவதாகவும், கொரோனா தொற்று குறைந்த பிறகு நேர்த்திக்கடனை செலுத்தலாம் என நினைத்ததால் தாமதம் ஆனது என்றும் அந்த கடிதத்தில் உலகநாதன் தெரிவித்துள்ளார். இவரின் மரணம் கரூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.