தமிழ் மொழியை கற்பிக்க வலியுறுத்தல் - மத்திய அமைச்சருடன் திருச்சி சிவா சந்திப்பு
தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தமிழ் மொழியை கற்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் திமுக எம்.பி திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தமிழ் மொழியை கற்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் திமுக எம்.பி திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் இன்று தர்மேந்திர பிரதானை சந்தித்த திருச்சி சிவா, பின்பு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சி.பி.எஸ்.சி மாணவர்களுக்கு சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், தமிழக மாணவர்களுக்கு தமிழை கற்க வழிவகை செய்ய வேண்டுமென அமைச்சரிடம் வலியுறுத்தியதாக கூறினார்.
Next Story
