144 கிலோ வெள்ளி, ரூ.32 லட்சம் பறிமுதல் - காட்பாடி ரயில்வே பாதுகாப்பு படை அதிரடி
பதிவு : ஜூலை 09, 2021, 12:44 PM
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில், 144 கிலோ வெள்ளி கட்டிகள், நகைகள் மற்றும் 32 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் ரயில்வே போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
விசாகபட்டினத்தில் இருந்து கொல்லம் சென்று கொண்டிருந்த எக்பிரஸ் ரயில், காட்பாடி ரயில் நிலையம் வந்த போது, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமாக இருந்த 4 பேரை சோதனை செய்தனர். அப்போது அவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த, சுமார் 1 கோடியே 5 லட்ச ரூபாய்  மதிப்பிலான 144 கிலோ வெள்ளி கட்டி, நகைகள், மற்றும் 32 லட்ச ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இக்குற்றச் செயலில் ஈடுபட்ட சேலத்தை சேர்ந்த சதீஷ் குமார், நித்தியானந்தம், பிரகாஷ், சுரேஷ் ஆகிய 4 பேரும் உடனடியாகக் கைது செய்யப்படனர். இவர்கள் நால்வரும் நகை வியாபாரிகள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பிற செய்திகள்

நடிகர் விஜய் சொகுசு காருக்கான நுழைவு வரியை செலுத்தி விட்டார்

நடிகர் விஜய் சொகுசு காருக்கான நுழைவு வரியை செலுத்தி விட்டார் - தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றம் தகவல்

34 views

"நீட் தேர்வு-தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்கும்" - அமைச்சர் துரைமுருகன் உறுதி

நீட் தேர்வுக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்கும் என்று அமைச்சர் துரைமுருகன் உறுதிபட தெரிவித்தார்.

18 views

கே.சி.வீரமணி மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு - முதல் தகவல் அறிக்கை விவரங்கள்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.

52 views

கொரோனாவால் பறிபோன வருமானம் - தம்பதி தீக்குளித்து தற்கொலை

கொரோனாவால் வருமானம் முடங்கிய விரக்தியில் திருச்சியை சேர்ந்த தம்பதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

154 views

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த நபர் - சிகிச்சை பயனின்றி உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்தவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

99 views

ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான வழக்கு - விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைப்பு

ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் இன்னும் 4 சாட்சிகளை மட்டுமே விசாரிக்க வேண்டியுள்ளது என உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

36 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.