144 கிலோ வெள்ளி, ரூ.32 லட்சம் பறிமுதல் - காட்பாடி ரயில்வே பாதுகாப்பு படை அதிரடி
பதிவு : ஜூலை 09, 2021, 12:44 PM
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில், 144 கிலோ வெள்ளி கட்டிகள், நகைகள் மற்றும் 32 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் ரயில்வே போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
விசாகபட்டினத்தில் இருந்து கொல்லம் சென்று கொண்டிருந்த எக்பிரஸ் ரயில், காட்பாடி ரயில் நிலையம் வந்த போது, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமாக இருந்த 4 பேரை சோதனை செய்தனர். அப்போது அவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த, சுமார் 1 கோடியே 5 லட்ச ரூபாய்  மதிப்பிலான 144 கிலோ வெள்ளி கட்டி, நகைகள், மற்றும் 32 லட்ச ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இக்குற்றச் செயலில் ஈடுபட்ட சேலத்தை சேர்ந்த சதீஷ் குமார், நித்தியானந்தம், பிரகாஷ், சுரேஷ் ஆகிய 4 பேரும் உடனடியாகக் கைது செய்யப்படனர். இவர்கள் நால்வரும் நகை வியாபாரிகள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பிற செய்திகள்

தந்தி டிவி செய்தி எதிரொலி : ஆறு மாதங்களாக கிடப்பில் போட்ட பணி - இருபது நாட்களில் நிறைவு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள நாராயணன் நகர் பகுதியில் கழிவு நீர் செல்லும் பாதையின் பராமரிப்பு பணியை ஆறு மாதங்களாக கிடப்பில் போட்டிருந்தததாக கூறப்படுகிறது

11 views

மாநிலங்களவையில் கூச்சல் - மசோதாவை கிழித்து உறுப்பினர்கள் போராட்டம்

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

15 views

"டெங்கு பரவலை தடுக்க நடவடிக்கை தேவை"- தமிழகம், புதுச்சேரி அரசுகளுக்கு உத்தரவு

டெங்கு பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழகம் மற்றும் புதுசேரி அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

14 views

கொரோனா வைரசின் தோற்றம் - 2ம் கட்ட ஆய்வு நடத்த முடிவு

கொரோனா வைரசின் தோற்றம் குறித்த ஆய்வானது அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்று சீன வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

9 views

ஏழுமலையான் கோவிலில் கட்டுப்பாடுகள் தீவிரம்: முகக்கவசம் இல்லையென்றால் அபராதம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடப்படுள்ளது.

14 views

'வலிமை' முதல் பாடல் வெளியீடு எப்போது? - இன்று இரவு 7 மணிக்கு அறிவிப்பு

வலிமை படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.