தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவராக இருந்து வந்த எல்.முருகன், மத்திய இணை அமைச்சராக பதவியேற்று கொண்டார். இந்நிலையில், தமிழக பாஜகவின் புதிய தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலையை நியமித்து, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார். தற்போது பாஜக துணைத்தலைவராக உள்ள அவர், நாளை மாலை 4 மணிக்கு, தி.நகர் பாஜக தலைமை அலுவலகத்தில், புதிய தலைவராக பதவியேற்க உள்ளார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அவர், அரசியல் ஈடுபாடு காரணமாக 2019ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பாஜகவில் இணைந்த அவர், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story