இரண்டு யானைகளுடன் வலம் வரும் 'பாகுபலி' யானை - விவசாய பகுதிகளில் யானைகள் உலா

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் புதியதாக இரண்டு யானைகளுடன் பாகுபலி யானை வலம் வருவதால், ரேடியா காலர் பொருத்தும் பணி மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது
x
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து பாகுபலி எனும் காட்டுயானை வெளியேறி, விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தது. வனத்தை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து, பொதுமக்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தி வந்தது. இதனை தடுப்பதற்காக பாகுபலி யானைக்கு ரேடியோ காலர் பொருத்த வனத்துறையினர் முடிவெடுத்தனர். இதற்காக கலீம், மாரியப்பன், வெங்கடேஷ் என 3 கும்கி யானைகளும் மேட்டுப்பாளையம் அழைத்து வரப்பட்டன. வனத்துறையினர் 7 குழுக்களாக பிரிந்து பாகுபலி யானையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லாறு வனப்பகுதியில் மூன்று முறைக்கு மேல் மயக்க ஊசி செலுத்தி யானையை பிடிப்பதற்கான முயற்சி தோல்வியில் முடிந்தது. வனத்துறையினரிடம் சிக்காமல் தனியாக சுற்றி வந்த பாகுபலி யானை, தற்போது மேலும் இரண்டு காட்டு யானைகளுடன் சுற்று வருகிறது. வாகன போக்குவரத்து நிறைந்து மேட்டுப்பாளையம் - கல்லார் சாலை, பாக்கு தோப்புகள், சமயபுரம் குடியிருப்பு பகுதிகளில் யானைகள் வலம் வருகின்றன. இது வனத்துறை ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாகுபலி யானைக்கு ரேடியோ காலர் பொருத்துவதில், மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்