மத்திய இணையமைச்சரான எல்.முருகன் கடந்த வந்த பாதை

தமிழக பாஜக தலைவரான எல்.முருகன் தற்போது மத்திய இணையமைச்சராக பதவியேற்று கொண்டுள்ளார்.
x
தமிழக பாஜக தலைவரான எல்.முருகன் தற்போது மத்திய இணையமைச்சராக பதவியேற்று கொண்டுள்ளார். அவர் கடந்து வந்த பாதையை தற்போது காணலாம். மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள எல்.முருகன் நாமக்கல் மாவட்டம் பரமத்தி கிராமத்தில் பிறந்து பள்ளிப்படிப்பை முடித்து , சென்னையில் உள்ள அரசு அம்பேத்கர்  சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றுள்ளார். சட்ட கல்லூரி படிக்கும் போது பாஜகவின் மாணவர் அமைப்பான அமைப்பான ஏபிவிபி மாநில செயற்குழு உறுப்பினராக எல்.முருகன் பதவி வகித்துள்ளார்.  பட்டியல் அணி மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து படிப்படியாக மத்திய அரசு பதவியான தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையத்தின் துணை தலைவராக 2017 - ல் தேர்வு செய்யப்பட்டார்.  பின்னர் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த 2020 - ல் தமிழக பாஜக தலைவராக  எல்.முருகனை பாஜக தேசிய தலைமை நியமித்தது. எல்.முருகன் தலைமையில் நடத்தப்பட்ட வேல் யாத்திரை, தமிழக அரசியலில், பாஜகவை பேசு பொருளாக மாற்றி காட்டியது.  அதிமுகவுடன் கூட்டணி வைத்து 20 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டு 4 சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று வெற்றி கணக்கை துவக்கி வைத்தார் எல்.முருகன். பாஜக தலைமை, எல்.முருகனின் அயராத உழைப்பை பார்த்து, மத்திய இணையமைச்சராக பதவி வழங்கியுள்ளனர். 



Next Story

மேலும் செய்திகள்