மனைவியின் காதலனை கொன்ற கணவன் - மது குடிக்க வைத்து கொலை செய்த கொடூரம்
பதிவு : ஜூலை 07, 2021, 05:14 PM
தன் மனைவியுடன் தகாத உறவில் இருந்த நண்பரை இளைஞர் ஒருவர் கொடூரமாக கொலை செய்து வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த படப்பையை சேர்ந்தவர் ராமு. நண்பர்களுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்ற ராமு அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவரின் நண்பரான மணி என்பவரை பிடித்து விசாரித்த போது தான் ராமு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மணியின் மனைவியுடன் ராமுவுக்கு தகாத உறவு இருந்ததாகவும், அதை கைவிட சொன்ன போதும் அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ராமுவை மது குடிக்க வைத்து தன் நண்பர்களுடன் சேர்ந்து மணி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கொலையாளிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.