அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு அழுகிய முட்டை விநியோகம் - அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள்
பதிவு : ஜூலை 07, 2021, 02:11 PM
ராமநாதபுரம் அருகே அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முட்டைகள் அழுகி இருந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே ஆய்க்குடி அங்கன்வாடி மையத்தில் 20 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். ஊரடங்கு காலம் என்பதால், குழந்தைகளின் வீடுகளுக்கே சென்று அரிசி, பருப்பு, முட்டை உள்ளிட்ட பொருட்களை அங்கன்வாடி பொறுப்பாளர் அளித்து வருகிறார். அப்படி வழங்கப்பட்டதில் பல முட்டைகள் அழுகியும், குஞ்சுகள் உருவான நிலையில் இருந்ததை கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு குழந்தைக்கு 10 முட்டைகள் வீதம் 200 முட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் அழுகிய நிலையிலும், குஞ்சுகள் உருவான நிலையில் இருந்துள்ளன. இதுகுறித்து அங்கன்வாடி பொறுப்பாளரிடம், பெற்றோர்கள் புகார் அளித்தனர். நல்ல தரமான முட்டைகளை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.