தாயை வீட்டை விட்டு விரட்டிய மகன் - 80 வயது மூதாட்டி காவல் ஆணையர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார்
பதிவு : ஜூலை 07, 2021, 02:00 AM
மகன் தன்னை வீட்டை விட்டு விரட்டி விட்டதாகவும் வாழ வழியின்றி தவிப்பதாக 80 வயது மூதாட்டி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்தார்.
மகன் தன்னை வீட்டை விட்டு விரட்டி விட்டதாகவும் வாழ வழியின்றி தவிப்பதாக 80 வயது மூதாட்டி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்தார்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தள்ளாத வயதில் கண்ணீர் மல்க நிற்கும் இந்த மூதாட்டியின் பெயர் கோமளா பாய்.. வயது 80. 

3 பிள்ளைகளை பெற்ற இவர், சென்னையில் உள்ள காப்பகம் ஒன்றில் இருக்கிறார். 

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை திருவொற்றியூரில் வாழ்ந்து வந்தவர் தான் இவர். இவரின் கணவர் சேஷாசலம் எண்ணூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். 

சேஷாசலத்திற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழக்கவே அவரின் பணி இவர்களின் மகன் கமலக்கண்ணனுக்கு கிடைத்துள்ளது. பணி நிரந்தரம் ஆகி செட்டிலான மகன், தன் தாயிடம் வந்து தனக்கு ஒரு வீடு வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது தன் மகன் தானே என கோமளா பாயும் ஒரு கிரவுண்டில் நிலம் வாங்கி கொடுத்துள்ளார். 

பின்னர் வீடு கட்ட லோன் தேவை என கூறவே அதற்கும் கோமளா பாய் உதவியுள்ளார். 

பின்னர் தனக்கு சொந்தமான வீட்டை விற்ற கோமளா பாய், 3 பிள்ளைகளுக்கும் அதை சரி சமமாக பிரித்துக் கொடுத்துள்ளார். பின்னர் தன் மகனின் பராமரிப்பில் இருந்துள்ளார் வயதான அந்த தாய். 

15 ஆண்டுகளாக கே.ஆர்.விஜயா, ராதிகா உள்ளிட்ட நடிகைகளின் வீட்டில் வேலை பார்த்து வந்த கோமளா பாய், அதற்காக பெற்ற சம்பளத்தை தன் மகனிடமே கொடுத்துள்ளார். 

ஒரு கட்டத்தில் தன் தாயிடம் இருந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியான பின் தன் மனைவி, குழந்தைகள் என செட்டிலாகி தன் தாயை விட்டு விலகினார். 

பின்னர் காப்பகத்திற்கு சென்ற அவருக்கு மாதம் மாதம் செலுத்த வேண்டிய கட்டணத்தை கூட மகன் செலுத்தாமல் உள்ளதாக கண்ணீர் மல்க தெரிவிக்கிறார் அந்த தாய்...

கணவர் பெயரில் வரும் பென்ஷன் பணத்தை கூட மகனே வாங்கிக் கொள்வதால் உணவின்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்த தாய் கண்ணீர் வடிக்கிறார். 

எனவே தன்னை பராமரிக்காமல் விட்ட மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோமளா பாய் சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனுவை அளித்துள்ளார்.... 

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

250 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

200 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

132 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

20 views

பிற செய்திகள்

சென்னையில் 2வது விமான நிலையம்? - விமான நிலைய விரிவாக்கப் பணி மும்முரம்

சென்னையில் 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை தமிழக அரசு இன்னும் இறுதி செய்யாததால், அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

182 views

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை -அமைச்சர் செந்தில் பாலாஜி

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு சோதனையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார்.

23 views

"மழை நீரை முழுமையாக சேமிக்க நடவடிக்கை" - முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்

மழை காலத்தில் கிடைக்கும் நீரை முழுமையாக சேமித்து பயன்படுத்தும் வகையில், புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்களை அமைத்திட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

17 views

"புதிய மாநகராட்சி, நகராட்சி விரைவில் அறிவிப்பு" - அமைச்சர் கே.என்.நேரு

புதிய மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் விரைவில் அறிவிக்கப்பட்டதும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்பட்டு, இந்த ஆண்டிற்குள் நடத்தி முடிக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

36 views

"சென்னை, கரூரில் சொந்த வீடு இல்லை" - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்....

30 views

மீண்டும் லாட்டரி சீட்டு - எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

தமிழகத்தில் ஏழை எளிய மக்களை பாதிக்கக்கூடிய லாட்டரி சீட்டு விற்பனையை தமிழக அரசு மீண்டும், கொண்டு வந்தால் மக்களின் மிகப் பெரிய எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

53 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.