நீலகிரியில் பரவலாகப் பெய்யும் மழை - புளியம்பாறை ஆற்றில் நீர் பெருக்கம்
பதிவு : ஜூலை 06, 2021, 12:52 PM
நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில், கடந்த ஆண்டு பெய்த மழையால் புளியம்பாறை பகுதியில் இருந்த பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
மீண்டும் பாலம் கட்ட பணிகள் துவங்கப்பட்ட நிலையில், தற்போது பரவலாக பெய்து வரும் மழையால், ஆற்றில் நீர் பெருகியுள்ளது. அந்த நீர் அங்கிருக்கும் விவசாய தோட்டங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ள நிலையில், நாள் முழுவதும் ஆற்றுநீர் விவசாய நிலங்களில் பாய்வது அப்பகுதி மக்களிடையே எதிர்ப்பை கிளப்பியுள்ளது. இதுபற்றி அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், ஒப்பந்ததாரர் பாலம் கட்டும் பணியில் காட்டிய மெத்தனமே இதற்கு காரணம் எனவும், அதிகமாக மழை பெய்யும் பட்சத்தில் ஆற்றில் வெள்ளம் அதிகரித்தால் விவசாய நிலங்கள் மூலம் கிராமங்களும் வெள்ள நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

பிற செய்திகள்

"நடிகர் விஜய் நுழைவு வரி பாக்கி செலுத்தி விட்டார்"

சொகுசு காருக்கான நுழைவு வரி பாக்கியை நடிகர் விஜய் செலுத்தி விட்டதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 views

7.5 % இட ஒதுக்கீடு - விசாரணை தள்ளிவைப்பு

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் இறுதி விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் அக்டோபர் 21ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

12 views

"பணம், தங்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல்" - லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தகவல்

கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் தங்கம், பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

8 views

குழந்தைகள் விற்பனை விவகாரம் - ஜாமின் மறுப்பு

மதுரையில் சட்டவிரோதமாக குழந்தை விற்பனை செய்த வழக்கில் காப்பகத்தின் நிறுவனர் சிவகுமார் உதவியாளர் மதார்ஷா ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

23 views

கொரோனா மரணம்-இறப்பு சான்றிதழ் விவகாரம் - "விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்" : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கொரோனா தொற்று பாதித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இறப்பு சான்றிதழ் வழங்குவது குறித்த விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4 views

சமூகநீதி - கண்காணிக்க குழு அமைக்க முடிவு

தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வு, ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல் முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.