தயாரிப்பாளர்கள் சங்கம் - உயர்நீதிமன்றம் அதிரடி

தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டின் பெயரையும், இலச்சினையையும் பயன்படுத்த தடைகோரிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
x
தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டின் பெயரையும், இலச்சினையையும் பயன்படுத்த தடைகோரிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.இதொடர்பாக சங்கத்தின் தலைவர் ஜாக்குவார் தங்கம் 2019ல் தொடர்ந்த வழக்கில், தங்கள் சங்கத்தில் இருந்து விலகிய ஜி.பாலசுப்ரமணியன், அதே பெயர் மற்றும் லச்சினையை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாகவும், உறுப்பினர்களிடம் சந்தா வசூலிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன்மீதான விசாரணையில், தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டின் பெயர், லச்சினையை மற்றவர்கள் பயன்படுத்த தடை விதிக்குமாறு மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அதேசமயம், ஜாக்குவார் தங்கத்திற்கு வழக்கு தொடர முகாந்திரம் இல்லை எனக்கூறி, அவரது மனுவை தள்ளுபடி செய்யுமாறு பாலசுப்பிரமணியன் கோரியிருந்தார். இதையடுத்து, ஒரே பெயரில் இரண்டு சங்கங்கள் செயல்பட்டால் அது உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என தெரிவித்த நீதிபதி,தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டின் பெயர் மற்றும் லச்சினையை பயன்படுத்த பாலசுப்பிரமணியனுக்கு தடைவிதித்ததோடு, இந்தப் பெயரைப் பயன்படுத்தி பெறப்பட்ட சந்தா தொகை  உள்ளிட்டவற்றை ஜாக்குவார் தங்கம் தலைமையிலான சங்கத்திற்கு வழங்குமாறு பாலசுப்ரமணியனுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்