இலையில் முகக்கவசம்...இயற்கையை நம்பும் பழங்குடியினர்!
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் பழங்குடியின மக்கள் கொரோனா நோய் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள பீச்சலாம் என்னும் இலையை முகக்கவசமாக பயன்படுத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் பழங்குடியின மக்கள் கொரோனா நோய் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள பீச்சலாம் என்னும் இலையை முகக்கவசமாக பயன்படுத்தி வருகின்றனர். வனப்பகுதிக்குள் இயற்கையாக விளையும் பீச்சலாம் இலையில் மருத்துவத்தன்மை இருப்பதாகவும், இதில் உள்ள நறுமணத்தை நுகர்வதால் நுரையீரல்களுக்கு சென்று கிருமிகளை அழிப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும், நோய் தொற்று ஏற்படுவதை தடுக்கும் விதமாகவும் காலம் காலமாக இந்த இலையை பயன்படுத்திவருவதாக பழங்குடியின கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
Next Story
