"சிக்கன் பிரை சேமியாதான் வேண்டும்" - ரகளையில் ஈடுபட்ட அரசியல் பிரமுகர்கள்
பதிவு : ஜூன் 30, 2021, 01:32 PM
ஆம்பூரில், சிக்கன் ஃப்ரை சேமியாவுக்காக பிரியாணிக் கடையை, அரசியல் பிரமுகர்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் ரயில் நிலையம் முன்பு பிரபல பிரியாணி கடை உள்ளது. மதிய நேரத்தில் அந்தக் கடைக்குள் நுழைந்த ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் தயாளன் மற்றும் காங்கிரஸ் பிரமுகர் பிரபு ஆகியோர் கடை உரிமையாளர்கள் சாலிக் மற்றும் சர்தார் ஆகியோரிடம் சிக்கன் ஃப்ரை சேமியா கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.

அவர்களோ, சிக்கன் ஃப்ரை சேமியா மாலையில் தான் தயார் செய்யப்படும் எனவும், தற்போது பிரியாணி மட்டுமே உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். உடனே தயாளனும் பிரபுவும், தங்களுக்கு சிக்கன் ஃப்ரை சேமியாதான் வேண்டும் என்று அடம்பிடித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடை உரிமையாளர் சாலிக்கை மிரட்டிய தயாளன், திடீரென்று அவரை சரமாரியாகத் தாக்கத் துவங்கியுள்ளார்... அத்துடன் குளிர்பான பாட்டில்களைக் கொண்டும் கண்மூடித் தனமாக தாக்கியுள்ளார். உடன் வந்த பிரபுவும் சேர்ந்து தாக்கிய நிலையில், சாலிக்கிற்கு கை முறிவு ஏற்பட்டு நிலை குலைந்து போனார்.

அத்துடன், அரசியல் பிரமுகர்கள் இருவரும் இணைந்து கடையில் இருந்த மேஜை நாற்காலிகளை அடித்து நொறுக்கியுள்ளனர். இத்தனைக் காட்சிகளும் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த நிலையில், அந்தக் காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடை உரிமையாளர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிக்கன் ஃப்ரை சேமியாவிற்கு பதிலாக பிரியாணி சாப்பிட கூறியதற்காக, அரசியல் பிரமுகர்கள் இருவர் பிரியாணிக் கடையை அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிற செய்திகள்

"நடிகர் விஜய் நுழைவு வரி பாக்கி செலுத்தி விட்டார்"

சொகுசு காருக்கான நுழைவு வரி பாக்கியை நடிகர் விஜய் செலுத்தி விட்டதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 views

7.5 % இட ஒதுக்கீடு - விசாரணை தள்ளிவைப்பு

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் இறுதி விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் அக்டோபர் 21ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

12 views

"பணம், தங்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல்" - லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தகவல்

கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் தங்கம், பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

8 views

குழந்தைகள் விற்பனை விவகாரம் - ஜாமின் மறுப்பு

மதுரையில் சட்டவிரோதமாக குழந்தை விற்பனை செய்த வழக்கில் காப்பகத்தின் நிறுவனர் சிவகுமார் உதவியாளர் மதார்ஷா ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

23 views

கொரோனா மரணம்-இறப்பு சான்றிதழ் விவகாரம் - "விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்" : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கொரோனா தொற்று பாதித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இறப்பு சான்றிதழ் வழங்குவது குறித்த விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4 views

சமூகநீதி - கண்காணிக்க குழு அமைக்க முடிவு

தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வு, ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல் முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.