சுற்றுலா தலமாக மாறும் வில்லிவாக்கம் ஏரி - பசுமைப் பூங்கா அமைக்கும் பணிகள் தீவிரம்
பதிவு : ஜூன் 30, 2021, 01:03 PM
சென்னை வில்லிவாக்கம் ஏரியை, பொழுதுபோக்கு அம்சங்களுடன் சுற்றுலா தளமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் 39 ஏக்கரில் மிகப்பெரிய ஏரி  உள்ளது. இதில் 27 புள்ளி 5 ஏக்கர் நிலத்தில் 27 கோடி ரூபாய் செலவில் பசுமை பூங்கா அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மீதமுள்ள 11 ஏக்கர் நிலம் சென்னை குடிநீர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதில் 10 புள்ளி 69 ஏக்கர் நிலம் நீரால் நிரம்பி காணப்படுகிறது. இந்நிலையில் வில்லிவாக்கம் ஏரியை புரனமைத்து சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு திட்டபணிகள் அதிவேகத்தில் நடந்து வருகிறது.

குழந்தைகளுக்காக பிரத்யேக விளையாட்டு திடல், படகு போக்குவரத்து, கண்ணாடி மேம்பாலம், திறந்தவெளி திரையரங்குகள், உடற்பயிற்சி நிலையம், ஆவின் பாலகம், குடிநீர் வசதி, பூங்காவிற்குள் அமர இருக்கை வசதி, புட் கோர்ட்,   100 வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு வாகன நிறுத்துமிடம், சுற்றிலும் தடுப்பு வேலி, பூங்காவிற்கு வருகை தருவோர் சுத்தமான சுகாதாரமான காற்றை சுவாசிக்க மூலிகை செடிகள், மேலும் மணல் திட்டுகள் அமைக்கப்பட்டு பறவைகள் சரணாலயமாக மாற்றவும் பணிகள் நடந்து வருகின்றன.

சிறப்பம்சமாக, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஏரியின் மையப்பகுதயில் கண்ணாடி தளத்துடன் சுமார் 250 மீட்டர் நீளத்தில் 12 புள்ளி 5 மீட்டர் உயரத்தில் கண்ணாடி மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதில் படிக்கட்டுடன், லிப்ட் வசதியும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது சிங்கப்பூரில் உள்ள மேக் ரிச்சி ட்ரி டாப் பிரிட்ஜ் வடிவத்தில் அமைக்கபட இருக்கிறது. தற்போது இந்த பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. வரும் செப்டம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

வில்லிவாக்கம் ஏரி பசுமை பூங்கா திட்டத்தில், வாகனங்கள் நிறுத்துமிடம், தோட்டம், நீருற்று ஆகியவற்றின் கட்டுமான பணிகள் முடிந்து விட்டன. சிட்கோ நகர் வழியாக ஏரி தீம்பார்க்கிற்கு செல்ல நுழைவு வாயிலும் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. வில்லிவாக்கம் ஏரி பசுமை பூங்கா, சென்னைவாசிகளுக்கு மற்றுமொரு சிறந்த பொழுதுபோக்கு மையமாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

பிற செய்திகள்

கே.டி.ராகவன், மதன் ரவிச்சந்திரன் மீது புகார் - நடவடிக்கை கோரி காவல் ஆணையரிடம் மனு

கே.டி.ராகவன் மற்றும் யூட்யூபர் மதன் ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்ககோரி சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் சென்னை காவல் ஆணையரிடம் மனு அளித்தார்.

10 views

"பி.சுப்பராயன், பி.டி.ராஜனுக்கு மணிமண்டபம்" - "முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பன்னீர் செல்வம் கோரிக்கை

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்களான டாக்டர் பி சுப்பராயன், பி.டி.ராஜன் ஆகியோருக்கு மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

6 views

நடந்து சென்ற பெண்ணிடம் 5 சவரன் வழிப்பறி - பைக்கில் வந்த நபரின் சிசிடிவி காட்சி வெளியீடு

வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடந்து சென்ற அஞ்சல்துறை பெண் ஊழியரிடம், மர்மநபர் ஒருவர் 5 சவரன் தங்க சங்கிலி பறித்து தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

8 views

விநாயகர் சதுர்த்தி அலங்காரத்தில் விபரீதம் - மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவில் வளாகத்தை அலங்கரித்த எலக்ட்ரீசியன், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

11 views

"பொருநை நாகரிகம்-பிரதமருக்கு அனுப்புங்கள்" - அண்ணாமலைக்கு, எம்.பி. சு.வெங்கடேசன் பதிலடி

அண்ணாமலை விநாயகர் அருள்பெற, பொருநை நதி நாகரிகம் குறித்த முதல்வரின் அறிக்கையை, பிரதமருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கோரியுள்ளார்.

8 views

பொது இடத்தில் வைத்த விநாயகர் சிலை - பறிமுதல் செய்து எடுத்துச் சென்ற அதிகாரிகள்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே பொது இடத்தில் வழிபாட்டுக்கு வைத்த விநாயகர் சிலையை வருவாய்த் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

50 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.