தமிழக மின்துறை நிறுவனங்கள் 2018-19-ம் ஆண்டில் ரூ.13,176 கோடி இழப்பு - காரணம் என்ன ?

தமிழக மின்துறை நிறுவனங்கள் மூலம் 2018-19-ம் ஆண்டில் அரசுக்கு 13 ஆயிரத்து 176 கோடி ரூபாய் ஒட்டுமொத்த இழப்பு ஏற்பட்டதாக இந்திய தணிக்கைத் துறை தலைவர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
x
தமிழக மின்துறை நிறுவனங்கள் மூலம் 2018-19-ம் ஆண்டில் அரசுக்கு 13 ஆயிரத்து 176 கோடி ரூபாய் ஒட்டுமொத்த இழப்பு ஏற்பட்டதாக இந்திய தணிக்கைத் துறை தலைவர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2018 மற்றும் 2019-ஆம் நிதியாண்டுகளுக்கான தணிக்கை அறிக்கை சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதன்படி, தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மற்றும் டான்டிரான்ஸ்கோ ஆகிய மின்துறை நிறுவனங்கள்13 ஆயிரத்து 259 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளன.

மின் கொள்முதல் மற்றும் உற்பத்திச் செலவோடு பணியாளர் மற்றும் நிதிச் செலவினங்கள் அதிகரிப்பே டான்ஜெட்கோவில் இழப்பு அதிகரித்ததற்கு முக்கிய காரணங்கள் என்றும் 2018-19-ஆம் ஆண்டில் வருவாய் 2,533 கோடியாக அதிகரித்தாலும், 7,396 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்ட பிறகு, 2018-19ஆம் ஆண்டில் தமிழக அரசு 9,126 கோடி ரூபாயைஉதவித் தொகையை பெற்றுள்ளபோதிலும் செயல்பாட்டு அளவுகளை எட்டாததாலும், மின் கட்டணத்தை உயர்த்தாததாலும் எதிர்பார்க்கப்பட்ட நிதி மாற்றங்களை அடைய முடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனமான உடன்குடி மின்சக்தி நிறுவனம் எந்தவொரு நடவடிக்கையையும் தொடங்கவில்லை
என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கோல் இந்தியா நிலக்கரி நிறுவனம் மூலம் 2014 முதல் 2019 வரையிலான ஆண்டுகளில் சுமார் 106  மில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரியை டான்ஜெட்கோ பெற்றிருக்க வேண்டும் என்றும் மாறாக 71 மில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரியை மட்டுமே வழங்கியதற்காக கோல் இந்தியா நிறுவனத்திற்கு டான்ஜெட்கோ அபராதம் விதிக்கவில்லை என்றும் சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல, நிலக்கரியை சேமித்து வைக்க தனியார் நிலக்கரி முனையத்தை பயன்படுத்தியதால், சுமார் 41 கோடி ரூபாய் தவிர்க்கக் கூடிய செலவு ஏற்பட்டதாகவும் சரக்கு ரயில் பெட்டிகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு நிலக்கரியை ஏற்றாமல் விட்டதனால், 101 கோடி ரூபாய் சரக்குக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், தரம் குறைந்த நிலக்கரியால் 171 கோடி ரூபாய் மதிப்புள்ள
மின் உற்பத்தி இழப்பை டான்ஜெட்கோ சந்தித்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்