நில அபகரிப்பு வழக்கு - 11 பேர் மீதான வழக்கு ரத்து

நில அபகரிப்பு புகாரில், திமுகவை சேர்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினர் உள்ளிட்ட 11 பேர் மீதான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
x
நில அபகரிப்பு புகாரில், திமுகவை சேர்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினர்  உள்ளிட்ட 11 பேர் மீதான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

சேலத்தில் உள்ள அங்கம்மாள் காலனியில் 23 குடும்பங்கள் குடியிருந்த நிலத்தை அபகரிக்க முயன்றதாக டி.கணேசன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில், சேலம் திமுக முன்னாள் மாவட்டச் செயலாளரான மறைந்த வீரபாண்டி ஆறுமுகம், அவரது உறவினர் பாரப்பட்டி சுரேஷ், உதவியாளர் கவுசிக பூபதி  உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், வீரபாண்டி ஆறுமுகம் காலமானதை தொடர்ந்து, தங்களுக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி பாரப்பட்டி சுரேஷ் உள்ளிட்ட 11 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பினருக்கும் இடையில்  சமரசம் ஏற்பட்டுவிட்டதால் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.  

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, 11 பேர் மீதான வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டார். 



Next Story

மேலும் செய்திகள்