குழந்தையின் கட்டை விரலை வெட்டிய வழக்கு - இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவு

பிறந்து 14 நாளே ஆன குழந்தையின் விரல் வெட்டப்பட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு உள்ளது.
x
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு,  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது, குழந்தையின் பெற்றொருக்கு இடைக்கால நிவாரணமாக 75,000 ரூபாய் நான்கு வார காலத்திற்குள் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். குழந்தையின் கட்டை விரலை பழையபடி சேர்க்கும் வகையில்,  பச்சிளம் குழந்தையை உடனடியாக நவீன மருத்துவமனைக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வு  துறை செயலாளர், தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி முதல்வர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர். வழக்கு விசாரணையையை  அடுத்த மாதம் 26 ஆம்  தேதிக்கு  ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்