எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். நூதன திருட்டு வழக்கு - அரியானாவில் முக்கிய குற்றவாளி கைது
பதிவு : ஜூன் 23, 2021, 02:01 PM
எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். நூதன திருட்டு வழக்கில், ஆன்லைன் மோசடிகளுக்கு பெயர் போன அரியானா மாநிலம் மேவாத் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய குற்றவாளியை சென்னை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். நூதன திருட்டு வழக்கில், ஆன்லைன் மோசடிகளுக்கு பெயர் போன அரியானா மாநிலம் மேவாத் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய குற்றவாளியை சென்னை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் கடந்த 17 முதல் 19 ஆம் தேதி வரை  பல்வேறு இடங்களில் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். இயந்திரத்தை குறி வைத்து நூதன முறையில் 20 இடங்களில் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுவரை அதிகாரப்பூர்வமாக 21 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன இந்த புகார்களின் அடிப்படையில் சுமார் 60 லட்சம் ரூபாய் வரை பணம் திருடு போயிருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. 
பல ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி 500-க்கும் மேற்பட்ட முறை இயந்திரத்தில் ஸ்வைப் செய்து பணம் திருடப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதிகபட்சமாக பெரியமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட எஸ்.பி.ஐ. வங்கி கிளையில் 190 முறை ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி,  சுமார் 18 லட்சம் ரூபாய் வரை மர்ம நபர்கள் திருடி உள்ளனர். இந்த நூதன திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க,  தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் கண்ணன் தலைமையிலான 2  தனிப்படை அமைக்கப்பட்டது. நூதன திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அரியானா மாநிலம் மேவாத்  மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இதனை அடுத்து  ஆன்லைன் மோசடிக்கு பெயர் போன மேவாத்தில் தனிப்படையினர் தேடுதல் வேட்டையை தொடங்கினர். சி.சி.டி.வி. காட்சி அடிப்படையில் முக்கிய குற்றவாளி என கருதப்படும் நபரை தனிப்படையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  அவரிடம் இருந்து  ஆன்லைன் டேட்டா , அதிநவீன தொழில் நுட்ப கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரியானா போலீஸ் உதவி இல்லாமல், ஆன்லைன் மோசடி கும்பலை அவர்களது தலைமையகத்திலேயே  கைது செய்து தமிழக காவல் துறை சாதனை படைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

63 views

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

43 views

பிற செய்திகள்

பீர் பாட்டிலால் இளைஞர் மீது தாக்குதல் - பார்ப்போரை பதற வைக்கும் காட்சிகள்

கள்ளக்குறிச்சி அருகே மதுபோதையில் பீர் பாட்டிலால் ஒருவரை கொடூரமாக அடிக்கும் காட்சிகள் இணையத்தில் பரவிய நிலையில் அது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

23 views

தொழிற்கல்வி படிப்பு அரசு மாணவர்களுக்கு சலுகை - தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தகவல்

மாணவர்களுக்கான, பொறியியல் சேர்க்கை அட்டவணையில் எவ்விதமான மாற்றமும் இருக்காது என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

6 views

"7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் 7 மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

26 views

தடுப்பூசி கோட்டாவில் மாற்றம் - மாநில அரசுகளுக்கு 75% தடுப்பூசி

தனியார் மருத்துவமனைகளுக்கான 25% சதவீத தடுப்பூசி கோட்டாவில் மத்திய அரசு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

12 views

பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலம் எங்கே? - தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பக்தவத்சல பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து பதிலளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

21 views

13ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் - நிதியமைச்சர் பி.டி.ஆர் தாக்கல் செய்கிறார்

தமிழக பட்ஜெட் வரும் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

87 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.