"நிதிநிலை சீராகும் போது தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்படும்" - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழகத்தின் நிதிநிலை சீரான பிறகு, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
x
ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, திமுக தேர்தல் வாக்குறுதியின்படி பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.  இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 2014ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பாஜக அரசு 9 ரூபாய் 48 பைசாவாக இருந்து பெட்ரோல் வரியை 21 ரூபாய் 48 காசுகளாக உயர்த்தியதாக கூறினார். இந்த  வரியில் 4 சதவீதத்தை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும் ஒன்றிய அரசு 96 சதவீத வரியை எடுத்து கொள்வதாகவும், மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டிய 50 ஆயிரம் கோடி வரியை ஒன்றிய அரசு கொடுக்கவில்லை என்றும் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்தார். எனவே தமிழகத்தின் நிதி நிலைமை மோசமாக உள்ள சூழலில், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க இயலாது என்றார். நிதிநிலை சீராகும் போது தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்படும் என நிதியமைச்சர் உறுதியளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்