போலீசார் தாக்கியதில் மளிகை கடை உரிமையாளர் உயிரிழப்பு
பதிவு : ஜூன் 23, 2021, 12:07 PM
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே போலீசார் தாக்கியதில் மளிகை கடை உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே போலீசார்  தாக்கியதில் மளிகை கடை உரிமையாளர் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து காவல் நிலையத்தை 200-க்கும் மேற்பட்ட மக்கள் முற்றுகையிட்டனர். சேலம் மாவட்டம் இடையப்பட்டி பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் என்கிற முருகேசன் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை கருமந்துறைக்கு நண்பருடன் சென்று விட்டு திரும்பி வரும் வழியில் இடையப்பட்டி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவர்களை நிறுத்தியுள்ளனர். அப்பொழுது போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில், முருகேசனை  போலீசார் சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர். இதில் மயங்கியவரை 108 ஆம்புலன்ஸ் மூலமாக தும்பல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று முதலுதவி அளித்த பின்னர்,  ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்துள்ளனர். இன்று காலை முருகேசன்  பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த  உறவினர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முருகேசனை போலீசார் தாக்கும் காட்சிகள் வேகமாக பரவி வருகிறது. போலீசார் ரவுண்டு கட்டி தாக்கியதில் உயிரிழந்த மளிகை கடை உரிமையாளர் முருகேசனுக்கு,  அன்னக்கிளி என்ற மனைவியும்,  2 மகள்கள் மற்றும்  ஒரு மகன் உள்ளனர்.  சாத்தான்குளம் சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினமான நேற்று, சேலம் போலீசாரால் இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

63 views

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

43 views

பிற செய்திகள்

பீர் பாட்டிலால் இளைஞர் மீது தாக்குதல் - பார்ப்போரை பதற வைக்கும் காட்சிகள்

கள்ளக்குறிச்சி அருகே மதுபோதையில் பீர் பாட்டிலால் ஒருவரை கொடூரமாக அடிக்கும் காட்சிகள் இணையத்தில் பரவிய நிலையில் அது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

15 views

தொழிற்கல்வி படிப்பு அரசு மாணவர்களுக்கு சலுகை - தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தகவல்

மாணவர்களுக்கான, பொறியியல் சேர்க்கை அட்டவணையில் எவ்விதமான மாற்றமும் இருக்காது என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

6 views

"7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் 7 மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

23 views

தடுப்பூசி கோட்டாவில் மாற்றம் - மாநில அரசுகளுக்கு 75% தடுப்பூசி

தனியார் மருத்துவமனைகளுக்கான 25% சதவீத தடுப்பூசி கோட்டாவில் மத்திய அரசு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

12 views

பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலம் எங்கே? - தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பக்தவத்சல பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து பதிலளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

21 views

13ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் - நிதியமைச்சர் பி.டி.ஆர் தாக்கல் செய்கிறார்

தமிழக பட்ஜெட் வரும் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

77 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.