பசியில் வாடுவோருக்கு ருசியான உணவு - நெகிழ்ச்சி அடைய வைக்கும் இளைஞர்கள்

நெல்லையில் ஊரடங்கு காலத்தில் ஆதரவற்றோருக்கு சத்தான உணவு வகைகளை வழங்கி தன்னார்வ அமைப்பினர் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். இதுபற்றி செய்தி தொகுப்பு..
x
ஊரடங்கு காலத்தில் ஆதவரவற்று வசிக்கும் மக்களுக்கு கொடை உள்ளத்தோடு பசியாற்றி வருபவர்கள் ஏராளம்...இதுபோன்ற உன்னத பணிகளில் தினந்தோறும் பல அமைப்புகள் ஈடுபட்டு வரும் சூழலில், நெல்லையைச் சேர்ந்த தன்னார்வ இளைஞர்கள் சிலர் சத்தான உணவுகளை வழங்கி உதவி செய்து வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் பசியால் வாடும் மக்களின் நிலையை அறிந்து நெல்லை ஜங்ஷன் பகுதியை சேர்ந்த இளைஞர்கள், தினந்தோறும் சுமார் 200 பேருக்கு விதவிதமான உணவை வழங்கி பசியை போக்கி நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளனர்.திருமண நிகழ்ச்சிகளில் விருந்து வைப்பது போன்று, ஒவ்வொரு நாளும் விதவிதமான உணவுகளை வழங்கி அசத்துகின்றனர் இந்த இளைஞர்கள்... இறுதி நாளில் FIVE STAR ஹோட்டலில் வழங்கப்படுவது போன்று 25க்கும் மேற்பட்ட உணவு வகைகளை கொடுத்து பசியாற்றி உள்ளார்கள், இவர்கள்...இதைவிட முதியவர்கள் யாரெனும் ஆசைப்பட்டு கேட்டால், அந்த உணவையும் தயாரிக்கின்றனர். கடந்த ஒரு மாதமாக அதிகாலை எழுந்து உணவு தயார் செய்து ஆதரவற்றோருக்கு விரும்பும் உணவை வழங்குவதை கடமை என கருதி சேவையாற்றியுள்ளனர் இந்த இளைஞர்கள்..பசியில் வாடும் மக்களுக்கு, ருசியான உணவை வழங்கி மனிதத்தை வளர்த்து வருவது பசியாறுவோரையும், செய்தியை கேட்போரையும் நெகிழ்ச்சியடைய வைக்கிறது.



Next Story

மேலும் செய்திகள்