முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜூலை 2 வரை நீதிமன்ற காவல்

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை ஜூலை 2ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
x
முன்னாள் அமைச்சர் மணிகண்டனை ஜூலை 2ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பெங்களூரில் கைது செய்யப்பட்டார். பெங்களூரில் தலைமறைவாக இருந்த நிலையில், தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதையடுத்து மணிகண்டன் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். சென்னையில் அடையாறு காவல்நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார், அவரிடம் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை செய்தனர். தொடர்ந்து சைதாப்பேட்டை நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். விசாரணையின் போது, சாந்தினி மற்றும் மணிகண்டன் இருவரும் விருப்பத்துடன் சேர்ந்து இருந்ததால், அதை பாலியல் வழக்காக எடுத்து கொள்ள முடியாது என வாதிட்ட மணிகண்டன் தரப்பு வழக்கறிஞர், வழக்கின் பிரிவை மாற்ற மாஜிஸ்திரேட்டிடம் முறையிட்டார். இது குறித்து போலீசாரிடம் கேட்டபோது, பாலியல் வழக்காக பதிவு செய்ததற்கான விளக்கத்தையும், ஆவணங்களையும் சமர்ப்பித்தனர். இதை ஏற்று கொண்ட நீதிபதி, மணிகண்டனை ஜூலை 2ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்