ஏழ்மையில் தவித்த இரு குடும்பங்கள் - சொந்த வீட்டுக் கனவை நனவாக்கிய ஆட்சியர்கள்

எலி வலையானாலும் தனி வலை வேண்டும்" என்று சொல்வார்கள்... ஆனால் ஏழைகளுக்கோ சொந்த வீடு என்பது எட்டாக் கனியாகவே உள்ளது...
x
நல்ல தலைமை அமைந்தால் எதுவும் சாத்தியமே என்பதை நிரூபிக்கும் வகையில், வறுமையில் வாடிய இரண்டு குடும்பங்களுக்கு சொந்த வீட்டுக் கனவை நனவாக்கியுள்ளனர் இரண்டு மாவட்ட ஆட்சியர்கள்...விருதுநகர் மாவட்டம் குச்சம்பட்டி கிராமத்தில் கிட்டத்தட்ட 37 ஆண்டுகளாக, சித்த வைத்தியம் செய்து வருபவர்கள்தான் சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் முத்துலட்சுமி தம்பதி...பாலைவனம் போல் காட்சியளிக்கும் இந்த கிராமத்தில் 10 ஆண்டுகளாக விவசாயம் பொய்த்து விடவே, பலரும் கிராமத்தைக் காலி செய்து விட்டு நகரப் பகுதிகளுக்குக் குடியேறிவிட்டனர்...ஆனால், இத்தம்பதியோ பிறந்து வளர்ந்த தங்கள் கிராமத்தைப் பாதுகாக்கவும், தன்னை நாடி வருவோருக்கு சித்த வைத்தியம் செய்யவும், எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத, குடிசை வீட்டில் வசித்து வந்துள்ளனர்..இவர்களின் நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டியின் கவனத்திற்கு செல்லவே, முதிய தம்பதியின் வீட்டிற்கே நேரில் சென்று விசாரித்துள்ளார்..சொந்த வீடுதான் இவர்களின் கனவு என்பதை அறிந்ததும், சற்றும் தாமதிக்காத ஆட்சியர், பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் நான்கே மாதங்களுக்குள் வீடு கட்டித் தருவதற்கான ஆணையை அத்தம்பதியினரிடம் வழங்கினார்...இச்சம்பவம் அத்தம்பதியினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது...இதே போல, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அடுத்த பட்டதூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் மணியம்மை...கணவரோ வெளிநாட்டிற்குச் சென்று விடவே, தன் 2 குழந்தைகளுடன் பழைய குடிசை வீட்டில் வசித்து வந்துள்ளார்...சொந்த வீடு கட்ட முடியாவிட்டாலும், சேதமடைந்த வீட்டின் கூரையையாவது மாற்றலாம் என முயற்சிக்கவே அதற்கும் பக்கத்து வீட்டுக்காரர் முட்டுக் கட்டையாக இருந்துள்ளார்...கேள்விக்குறியான தன் வாழ்க்கை குறித்து மணியம்மை சமூக வலைதளத்தில் ஆட்சியருக்கு புகார் அனுப்பியுள்ளார்...உடனடியாக செயல்பட்ட தஞ்சை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மணியம்மையின் இருப்பிடத்திற்கே சென்று, 2.5 சென்ட் வீட்டுமனை பட்டாவை வழங்கி, வியப்பில் ஆழ்த்தியுள்ளார்...மக்கள் நலனையே முதலாய்க் கொண்டு, சிறப்பாக செயலாற்றிய இந்த இரண்டு மாவட்ட ஆட்சியர்களுக்கும் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணன் உள்ளன...


Next Story

மேலும் செய்திகள்