4 சிங்கங்களுக்கு டெல்டா வகை கொரோனா - 11 சிங்கங்களின் மாதிரிகள் போபால் ஆய்வகத்திற்கு அனுப்பி வைப்பு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 4 சிங்கங்களுக்கு டெல்டா வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
4 சிங்கங்களுக்கு டெல்டா வகை கொரோனா - 11 சிங்கங்களின் மாதிரிகள் போபால் ஆய்வகத்திற்கு அனுப்பி வைப்பு
x
இது குறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 11 சிங்கங்களின் மாதிரிகள், போபாலில் உள்ள விலங்கியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்க பட்டதாகவும்,
இதில் 9 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சிங்கங்களை பாதித்த கொரோனா தொற்றின் மரபணு வகை குறித்து  பூங்கா நிர்வாகம் கோரிக்கை விடுத்த‌து. இதற்கு பதிலளித்த போபால் ஆய்வகம், வண்டலூர் பூங்காவில் உள்ள 4  சிங்கங்களுக்கு டெல்டா வகை கொரோனா தொற்று பாதித்து உள்ளதாக தெரிவித்து உள்ளது.



Next Story

மேலும் செய்திகள்