"பெண் வழக்கறிஞருக்கு முன் ஜாமீன் மறுப்பு" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞருக்கு முன் ஜாமின் வழங்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், அவரது மகளுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
பெண் வழக்கறிஞருக்கு முன் ஜாமீன் மறுப்பு - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
x
"பெண் வழக்கறிஞருக்கு முன் ஜாமீன் மறுப்பு" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு 

காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞருக்கு முன் ஜாமின் வழங்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், அவரது மகளுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.சென்னையில், ஊரடங்கை மீறிய விவகாரத்தில், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் தனுஜா மற்றும் ப்ரீத்தி ஆகியோரின், முன் ஜாமீன் மனுக்களை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதை அடுத்து,  இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.இந்த வழக்கை விசாரித்த  நீதிபதி தண்டபாணி, பெண் வழக்கறிஞர் தனுஜாவின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.அவரது மகள் ப்ரீத்திக்கு மட்டும் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். தவறு செய்யும் வழக்கறிஞர் மீது தானாக முன்வந்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விதிகளை கொண்டு வர வேண்டும் என்றும் பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளார்.இந்த வழக்கு தொடர்பாக வாட்ஸ் அப்பில் அவதூறாக கருத்து தெரிவித்த வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்த  நீதிபதி, இது குறித்து பதிலளிக்க அவருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்